“அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன் “

வாழ வழியின்றி..

                          
ஏக்கம் நிறைந்த பார்வைகள் எத்தனை..

அங்கம் இழந்த மனிதர்கள் எத்தனை..

கருகி மடிந்த உடல்கள் எத்தனை..

செல்கள் பறித்த உயிர்கள் எத்தனை..

உறவுகள் இழந்த சொந்தங்கள் எத்தனை..

பெற்றவரை இழந்த குழந்தைகள் எத்தனை..

கப்பல்களின் மிதப்பில் எத்தனை..

கடல்கள் பறித்த உயிர்கள் எத்தனை..

கதியின்றி கண்டங்களில் எத்தனை..

முள்கம்பிக்குள் முடங்கி எத்தனை..

வந்தோரை வாழவைத்தவர்கள் இன்று..

வாழ வழியின்றி கம்பிகளுக்கு பின்னால் ,

வார்த்தைகள் இல்லை வடிப்பதற்கு..

என்னுறவுகளே உங்களால் முடியுதா வடிப்பதற்கு..?

1 கருத்து:

vimala சொன்னது…

முள்கம்பிக்குள் முடங்கியது நம் தொப்புள் கொடி உறவுகள் !
அதனால் நம் இதயத்துள் ஆழ தைத்தது கூரிய முள்ளன்றோ!!
உன்னால் தான் முடியும் தம்பி!! இந்த முள் வேலியை உடைத்தெறிய!!!
உன் ஆக்கத்துக்கும், அது தரப்போகும் விடிவுக்கும் என் ஆசிகள்....!!!
"தம்பியும் நீயும் , மற்றும் உன்போன்றோரும் எம்முறவுகளைக் கரை சேர்க்க
ஆண்டவன் ,( என்று ஒருவன் இருந்தால் )ஆசீர்வதிக்கட்டும்!!!
அன்புடன் தம்பி பிரசன்னா!...உங்கள் படைப்புக்களுக்கு வாழ்த்துக்களும் ஆசிகளும்.