“அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன் “

அம்மா..!


அம்மா..!


அம்மாவை பற்றி கவிதையா...

நிச்சயமாக முடியாது யாராலுமே...

அம்மா உன்னை பற்றி எழுத

உலகத்தில் உள்ள அனைத்து காகிதங்களும் காணாது

என்னை பொறுத்தவரை கடவுளை நான் நம்ப காரணமே

எதை எதையோ படைத்த அவன்..

அம்மாவையும் படைத்தான் என்பதற்காகத்தான் ,

அம்மா..!

நான் சொன்ன முதல் வார்த்தை ,

எல்லோரும் சொல்லும் முதல் வார்த்தை ,

..மா அம்மா.. நாங்கள் அன்றே சொன்ன முதல் கவிதை..!




கடினங்கள் கண்டு கலங்கிடாத ,

கஸ்டங்கள் கண்டு துவண்டிடாத ,

தடங்கல்கள் கண்டு தவித்திடாத ,

ஒளிவிளக்கு கண்டிப்பாய் தாய்தான்..!




அகத்தினுள் ஒளிகொண்டு ,

புறத்தினுள் வலிகொண்டு ,

அங்கங்கள் பல நொந்து ,

ஆண்டுகள் பல கடந்தும் ,

அழியாத அன்பு செலுத்தும்...

அன்புருவே அம்மா..!




அன்புக்கு ஆசானாம் ,

அறிவின் ஒளிவிளக்காம் ,

பாசத்தின் இருப்பிடமாம் ,

பொறுமையின் பொக்கிசமாம் ,

போற்றத்தகு மாணிக்கமாம் ,

போற்றிடுவோம் அன்னயரை...

பெற்றிடுவோம் இன்பமதை..!


அன்புடன் - K.பிரசன்னா
Son/Of - கோமளேஷ்வரி









2 கருத்துகள்:

Unknown சொன்னது…

Arumai.....
ammavin anbai solla eththanai kaviyum enththanai kavidhaiyum paththaadhu...

coz edhaiyum edhirparatha anbu adhu..

பெயரில்லா சொன்னது…

முற்றும் துறந்த பட்டினத்தரையே பிடித்துவைத்த பாசம் தாய் பாசம்... தம்பி உங்கள் " அம்மா" கவிதைகளில் மயங்கி விட்டேன் உங்கள் இந்த அக்கா ஏனெனில் நானும் அம்மா என்னும் அரிய பட்டம் பெற்றவள்.. உங்கள் புலமைக்கு வாழ்த்துக்கள். எதிர்காலம் நீங்கள் விரும்பியவாறு அமைய என் உள்ளம் கனிந்த ஆசிகள்..