“அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன் “

வாழ வழியின்றி..

                          
ஏக்கம் நிறைந்த பார்வைகள் எத்தனை..

அங்கம் இழந்த மனிதர்கள் எத்தனை..

கருகி மடிந்த உடல்கள் எத்தனை..

செல்கள் பறித்த உயிர்கள் எத்தனை..

உறவுகள் இழந்த சொந்தங்கள் எத்தனை..

பெற்றவரை இழந்த குழந்தைகள் எத்தனை..

கப்பல்களின் மிதப்பில் எத்தனை..

கடல்கள் பறித்த உயிர்கள் எத்தனை..

கதியின்றி கண்டங்களில் எத்தனை..

முள்கம்பிக்குள் முடங்கி எத்தனை..

வந்தோரை வாழவைத்தவர்கள் இன்று..

வாழ வழியின்றி கம்பிகளுக்கு பின்னால் ,

வார்த்தைகள் இல்லை வடிப்பதற்கு..

என்னுறவுகளே உங்களால் முடியுதா வடிப்பதற்கு..?

மாறாத வடுக்கள்.

             
உலகத்தின் மீது கோபமெனக்கு ,
அதன் கொள்கைகள் மீது வெறுப்பெனக்கு ,
மனிதர்கள் மீது அனுதாபமெனக்கு ,
நாளை என்பது நிச்சயமில்லாத வாழ்வில்..
சாதி மதமென்பார் , இனம் மொழியென்பார் ,
குலம் கோத்திரம் மென்பார் - குருதி
எல்லோர்கும் ஒரே நிறமென அறியாதவர் ,
வலி உடலுக்கு உடல் மாறுபடாது என்பதை உணராதவர் .

மனித உரிமை என்பார் ,
மானுடத்தை காப்போமென்பார் ,
ஐக்கிய நாடுகள் சபை என்பார் ,
அடுக்கடுக்காய் பார்ட்டிகளில் கலந்துகொள்வார் ,
கை கொடுங்கள் ஐயா என்றால்
கை கட்டி வேடிக்கை பார்ப்பார் ,
உயர்மட்டங்களை தேடிச்சென்றால் ..
உள் நாட்டு விவகாரமென்பார் .

விலங்கொன்று தாக்கப்பட்டால் ..
மிருகவதை சட்டமென்பார் ,
விலங்கின பாதுகாப்பென்பார் ,
தாக்கியவன் சிறையிலடைக்கப்படுவான் .
இன்று பூனை ஒன்று குப்பைத்தொட்டியில்..
இடப்பட்டது தலைப்புச்செய்தி
உலகச்செய்திகள் அனைத்திலுமே ,
ஈழத்தில் மனித உயிர்களெல்லாம் நசிக்கப்பட்டு..
எஞ்சியவரெல்லாம் முட்கம்பிகளுக்குள்
முடக்கப்பட்டும் இன்று வரை
தட்டிக்கேட்பார் யாருமில்லை .

G8 நாடுகள் என்பார் ,
வீற்றோ பவர் நாடுகள் என்பார் ,
வளர்ந்துவிட்ட நாடுகளென்பார் ,
வகை தொகையின்றி ஆயுதம் செய்வார் ,
அதை பரீட்சித்து பார்க்குமிடம் ..
வளர் முக நாடுகளென்பார் ,
வட்டி இல்லாக்கடணுக்காய் -அள்ளி
இறைத்திடுவார் ஆயுதங்களை .
அப்போ அமெரிக்கா அணு பரீட்சித்து
ஹிரோஷிமா , நாகஷாயி - இப்போ
அநேக நாடுகள் தங்கள் தயாரிப்புக்களை
பரீட்சித்துப் பார்த்த இடம்
எங்கள் முள்ளிவாய்க்கால்..
எத்தனை நூறு ஆண்டுகளானாலும்
மாறாத வடுக்களாக அதன் சுவடுகள்..!

அ(ஆ)தி(க்)கம்..?

இருண்ட தேசமிதில்....!




அகதிகளுடன்... அடிமைதனங்களதிகம்..!

அநீதிகளுடன்... அல்லலுறுவோரதிகம்..!

அநாதைகளுடன்... அங்கவீனர்களதிகம்..!

ஆயுதங்களுடன்... அழிவுகளதிகம்..!

ஆக்கிரமிப்புக்களுடன்... ஆற்றொன்னா வடுக்களதிகம்..!

சண்டைகளுடன்... சச்சரவுகளதிகம்..!

கொலைகளுடன்... கொள்ளைகளதிகம்..!

கற்பழிப்புகளுடன்... காணாமல்போனோரதிகம்..!

விதவைகளுடன்... வீண்விரயங்களதிகம்..!

விலைகளுடன்... வரிகளுமதிகம்..!

லஞ்சத்துடன்... ஊளலுமதிகம்..!

தணிக்கைகளுடன்... தடைகளுந்தானதிகம்..!

மனிதநேயமட்டுமிங்கே... மரணப்படுக்கையில்..?

அம்மா..!


அம்மா..!


அம்மாவை பற்றி கவிதையா...

நிச்சயமாக முடியாது யாராலுமே...

அம்மா உன்னை பற்றி எழுத

உலகத்தில் உள்ள அனைத்து காகிதங்களும் காணாது

என்னை பொறுத்தவரை கடவுளை நான் நம்ப காரணமே

எதை எதையோ படைத்த அவன்..

அம்மாவையும் படைத்தான் என்பதற்காகத்தான் ,

அம்மா..!

நான் சொன்ன முதல் வார்த்தை ,

எல்லோரும் சொல்லும் முதல் வார்த்தை ,

..மா அம்மா.. நாங்கள் அன்றே சொன்ன முதல் கவிதை..!




கடினங்கள் கண்டு கலங்கிடாத ,

கஸ்டங்கள் கண்டு துவண்டிடாத ,

தடங்கல்கள் கண்டு தவித்திடாத ,

ஒளிவிளக்கு கண்டிப்பாய் தாய்தான்..!




அகத்தினுள் ஒளிகொண்டு ,

புறத்தினுள் வலிகொண்டு ,

அங்கங்கள் பல நொந்து ,

ஆண்டுகள் பல கடந்தும் ,

அழியாத அன்பு செலுத்தும்...

அன்புருவே அம்மா..!




அன்புக்கு ஆசானாம் ,

அறிவின் ஒளிவிளக்காம் ,

பாசத்தின் இருப்பிடமாம் ,

பொறுமையின் பொக்கிசமாம் ,

போற்றத்தகு மாணிக்கமாம் ,

போற்றிடுவோம் அன்னயரை...

பெற்றிடுவோம் இன்பமதை..!


அன்புடன் - K.பிரசன்னா
Son/Of - கோமளேஷ்வரி